AirAsia Newsroom

View Original

ஏர் ஏசியா குறைவான பயணிகள் சேவைக் கட்டணத்தை klia2-இல் அமல்படுத்தவுள்ளது

1 அக்டோபர் 2019 அன்று 23 மணிநேர, 23% "செழுமை பகிர்வோம்" அதிரடி விற்பனை

சிப்பாங், 30 செப்டம்பர் 2019 - klia2 மற்றும் மலேசியாவில் செயல்படும் பிற சர்வதேச விமான நிலையங்களில் குறைக்கப்பட்ட பயணிகள் சேவைக் கட்டணத்தை நாளை முதல் ஏர் ஏசியா அமல்படுத்துவதன் வழி, அதன் பயணிகளுக்கு இது ஒரு கொண்டாட்டமாக அமையும்.

இது, கடந்த மாதம் மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சியெவ் பூக் அவர்களின் அமைச்சரவை முடிவைத் தொடர்ந்து மறு ஆய்வு செய்து ஆசியானுக்கு அப்பால் செல்லும் பயணிகளின் பயண சேவைக் கட்டணம் RM73-லிருந்து RM50-க்கு குறைக்கப்பட்டதன் பிரதிபலிப்பாகும்.

ஏர் ஏசியா குழுமத் தலைவர் (ஏர்லைன்ஸ்) போ லிங்கம் கூறுகையில், " அமைச்சரவையின் முடிவை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம். மேலும், அமைச்சரின் அறிவிப்பின்படி, 1 அக்டோபர் 2019 முதல் குறைக்கப்பட்ட பயணிகள் சேவைக் கட்டணத்தை நாங்கள் அமல்படுத்தவுள்ளோம்.

விமான நிலையங்கள் அரசாங்கத்திற்குச் சொந்தமானவை என்பதால், பயணிகள் சேவைக் கட்டணத்தில் மாற்றங்களைச் செய்ய அமைச்சரவைக்கு அனைத்து அதிகாரமும் உண்டு.

"பயணிகள் சேவைக் கட்டணத்தை RM50-க்கு குறைத்திருக்கும் அமைச்சரவையின் முடிவானது, மலேசிய விமான போக்குவரத்து ஆணையம் (மாவ்காம்) நிர்ணயித்திருந்த கட்டணம் அதிகபட்ச விகிதமே தவிர நிலையானவை அல்ல என்பதை உறுதிபடுத்துகிறது. இது மாவ்கோம் வெளியிட்ட அறிக்கைகளுக்கேற்ப உள்ளது.

இந்த காரணத்தால், 1 அக்டோபர் 2019 முதல் அமலுக்கு வரவிருக்கும் இக்குறைந்த பயண சேவைக் கட்டண விகிதம் அரசு வர்த்தமானி பெறத் தேவையில்லை என நாங்கள் நம்புகிறோம்."

எனவே, ஏர் ஏசியா அதன் பயணிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் சிறப்பான முறையில் நன்றி தெரிவிக்கும் பொருட்டு, 1 அக்டோபர் 2019 அன்று 23 மணி நேர " செலுமை பகிர்வோம்" அதிரடி விற்பனை வழி 23% தள்ளுபடியை ஆசியானுக்கு அப்பால் அதாவது தியன்ஜின், மெல்பர்ன், சோல், ஜெய்ப்பூர், தோக்கியோ மற்றும் தைபை போன்ற தளங்களுக்கு வழங்குகிறது. இது, உடனடி பயணம் முதல் 9 பிப்ரவரி 2019 வரை நீடிக்கும்.

இந்த "செலுமை பகிர்வோம்" அதிரடி விற்பனை airasia.com மற்றும் ஏர் ஏசியா தொலைபேசி புலனம் வாயிலாக கிடைக்கும். தங்கும் விடுதி முன்பதிவுகளும் இதில் அடங்கும். மேலும், ourshop.com -இல் வரி விலக்கு கொண்ட பொருட்களுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

போ மேலும் கூறுகையில், " இந்த பயணிகள் சேவைக் கட்டணத்தைக் குறைத்து பயணங்களை மலிவாக்கும் முயற்சியில் எங்களோடு இணைந்து ஆதரவு வழங்கிய அரசாங்கத்திற்கும் அனைத்து மலேசியர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி. இது, விமான பயணிகளுக்கு மட்டுமல்ல, சுற்றுலாத்துறை மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரிதும் பயனளிக்கும். "

*முற்றும்*