இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு இலவச விசா பயணத்தைச் சிறப்புக் கட்டணங்களுடன் ஏர் ஆசியா கொண்டாடுகிறது
Photo Caption: (From left) Bo Lingam, Group CEO of AirAsia Aviation Group; Deputy High Commissioner of India to Malaysia, Ms Subhashini and Riad Asmat, CEO of AirAsia Malaysia at the press conference of the celebration of visa-free entry from India to Malaysia today.
கோலாலம்பூர் டிச 14
இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு இலவச விசா பயணம் மீதான அண்மைய அறிவிப்பை ஏர் ஆசியா இன்று விமர்சையாக கொண்டாடியது. இதற்காக இரு நாடுகளுக்கு இடையே குறிப்பிட்ட காலத்திற்கு ஊக்குவிப்பு கட்டணங்களை ஏர் ஆசியா அறிவித்தது.
அண்மைய மலேசிய அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, இந்தியப் பிரஜைகள் மலேசியாவிற்கு இலவச விசாவில் மகிழ்ச்சியாகப் பயணம் செய்யலாம். இந்த அதிரடி முயற்சி மலேசியாவிற்குப் பயணம் செய்யும் தேவைக்கு நிச்சயம் ஒரு தூண்டுகோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த முயற்சியானது இரு நாடுகளுக்கு இடையே இருந்து வரும் உறவுகளை மேலும் வலுப்படுத்த மேற்கொள்ளப்படும் ஒரு குறிப்பிட்ட சாதனையாகும். இதைக் கொண்டாடும் வகையில் இன்று ஏர் ஆசியா மற்றும் மலேசியாவிற்கான துணை இந்தியத் தூதர் சுபாஷி நாராயணன் இணைந்து, இரு நாடுகளுக்கு இடையே பயணம் செய்ய ஏர் ஆசியாவின் சிறப்புக் கட்டணங்களை அறிவித்தனர்.
இதோடு இரு நாடுகளுக்கிடையே விமானச் சேவைகளைக் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏர் ஆசியா அறிவித்துள்ளது.2024 முதல் கால் ஆண்டில் வாரத்திற்கு ஈர்க்கக்கூடிய 69 விமானச் சேவைகளை மேற்கொள்ளவிருக்கிறது. ஒரு ஆண்டிற்கு 1.5 மில்லியன் இருக்கைகளை ஏர் ஆசியா வழங்குகிறது.
உலக பயண விரும்பிகள் மற்றும் சாகச விரும்பிகள் ஏர் ஆசியாவின் விரிவான சேவையில் மிகச் சிறப்புக் கட்டணத்தில் தென்னிந்தியாவில் 7 நகர்களுக்கு டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம்.RM189 முழுமையான ஒரு வழிப் பயணத்திற்குச் சென்னை, திருச்சிராப்பள்ளி, கொச்சின், ஹைதராபாத், பெங்களூரு, கல்கத்தா மற்றும் விரைவில் திருவானந்தபுரும் ஆகிய நகர்களுக்குப் பயணிக்கலாம். மலேசியாவைச் சுற்றிப் பார்க்க விரும்பும் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் INR 4,499 கட்டணத்தில் கோலாலம்பூருக்கு நேரடியாக பயணிக்கலாம் மற்றும் கோலாலம்பூரிலிருந்து இந்த நகர்களுக்குப் பயணிக்கலாம். மற்றும் கோலாலம்பூரிலிருந்து மலேசியாவின் முக்கிய சுற்றுலா தளங்களுக்குச் சிறகடிக்கலாம். இந்த பயண காலம் உடனடியாக தொடங்கி 2024 செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடைகிறது. இரு நாடுகள் வழங்கும் வளமான கலாச்சாரம், சுவாச நிலப்பரப்பு மற்றும் கண் கவரும் நகர்களைக் கண்டறிய ஏர் ஆசியா வழங்கும் மலிவு கட்டணத்தைப் பயணிகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதனிடையே இப்பொழுது இந்தியப் பிரஜைகள் இலவச விசாவில் மலேசியாவிற்கு நுழையும் அனுமதி எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என மலேசியாவிற்கான இந்தியத் தூதர் பி.என் ரெட்டி கூறினார். மலேசியாவிற்கான இந்திய தூதர் கூறுகையில்:'இந்திய பிரஜைகள் மலேசியாவிற்கு இலவச விசாவில் வருகை புரிவதைக் கண்டு நாங்கள்
மகிழ்ச்சி அடைகிறேம், இது மக்களிடையே தொடர்புகளை ஒழுகும்.. இந்தியாவில் பல நகர்களுக்கு பயணிப்பதில் ஏர் ஆசியா முக்கிய பங்காற்றுகிறது. இதன் வழி மலேசியா மற்றும் இந்திய பயணிகளின் தொடர்பு வலுவடைகிறது' என்றார் அவர்.
இதனிடையே மலேசியாவிற்கு இந்தியப் பிரஜைகளுக்கான 30 நாள் இலவச விசா அனுமதி ஏர் ஆசியாவில் எங்களுக்கு ஆண்டின் சிறப்பம்சங்களில் ஒன்று என மலேசியா ஏர் ஆசியா தலைமை செயல்முறை அதிகாரி ரியாட் அஸ்மாட் கூறினார். கடந்த 2008 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு முதல் விமான சேவையைத் தொடங்கியது முதல் மலேசியா மற்றும் இந்தியாவிற்கு இடையே விமானச் சேவை தொடர்புகளை வலுப்படுத்துவதில் நாங்கள் மும்முரமாக இருந்து வந்தோம் என்றார் அவர். இவ்வேளையில் இந்த குறிப்பிடத்தக்க முடிவிற்காக மலேசிய அரசாங்கத்திற்கு எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த முடிவானது உள்நாட்டுச் சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை மேலும் வலுப்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
2023 ஆண்டின் முடிவை நாம் பார்க்கும் அதே வேளையில், வரும் புதிய ஆண்டு சுற்றுலாத் துறைக்குப் பிரகாசத்தைத் தரும். அரசாங்கத்தின் இந்த முடிவினால் மலேசியாவிற்கு அதிகமான இந்தியச் சுற்றுப்பயணிகள் பயணிக்க உள்ளனர். மலேசியச் சுற்றுலாத்துறை மேலும் துரித வளர்ச்சியைக் காண மலேசிய அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஒத்துழைக்க நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறோம் இன அவர் தெரிவித்தார்.
வட மற்றும் தென் நகர்களில் இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு ஏர் ஆசியா வலுவான 8 நேரடி விமானச் சேவைகளை மேற்கொண்டு வருகிறது.ஏர் ஆசியா குறுகிய தூர விமானச் சேவையின் வழி(flight code AK) சென்னை, திருச்சிராப்பள்ளி, கொச்சின், ஹைதராபாத், பெங்களூரு, கல்கத்தா ஆகிய நகர்களுக்குப் பறக்கிறது.ஏர் ஆசியா நடுத் தூர( flight code D7) விமானச் சேவையின் வழி புது டில்லி, அமிர்தரஸ் ஆகிய நகர்களுக்குப் பறக்கிறது.எதிர்வரும் 2024 பிப்ரவரி முதல் கேரளாவில் தென்பகுதி நகரான திருவனந்தபுரத்திற்கு ஏர் ஆசியா சிறகடிக்கவிருக்கிறது. கொச்சினை அடுத்த கேரளாவிற்கு இது இரண்டாவது நேரடி Fly-Thru வழி மலிவான டிக்கெட்டுகளை இந்த விமான நிறுவனம் வழங்குகிறது. இந்தியாவிலிருந்து மலேசியாவிற்குப் பயணிக்கும் பயணிகள், கோலாலம்பூரை ஏர் ஆசியாவின் தளமாகக் கொண்டு 22 நாடுகளில் 130க்கும் மேற்பட்ட நபர்களுக்குப் பயணிக்கலாம்.
ஊக்குவிப்பு ஒரு வழி கட்டணத்தில் வரி, MAVCOM கட்டணம், எரிபொருள் கட்டணம் மற்றும் இதர சம்மந்தப்பட்ட கட்டணங்கள் அடங்கும். இதர நிபந்தனைகள் உண்டு.
திருவனந்தபுரத்திற்கான விமானச் சேவை 2024 பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் தொடங்கும்.