ஏர்ஏசியா "உங்கள் பயணம், எங்கள் பேரார்வம்" எனும் கருப்பொருள் பிரச்சாரத்தின் வழி ஒற்றுமையைக் கொண்டாடுகிறது

#YourJourneyOurPassion -  wide.png

ஏர்ஏசியா "உங்கள் பயணம், எங்கள் பேரார்வம்" எனும் கருப்பொருள் பிரச்சாரத்தின் வழி ஒற்றுமையைக் கொண்டாடுகிறது

சிப்பாங், 27 ஆகஸ்ட் 2019 - எதிர்வரும் சுதந்திர தினம் மற்றும் மலேசிய தினத்தை முன்னிட்டு பல்லின மலேசிய மக்களின் ஒற்றுமையைக் கொண்டாடும் வகையில் ஏர்ஏசியா, "உங்கள் பயணம், எங்கள் பேரார்வம்" எனும் கருப்பொருள் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

ஏர்ஏசியாவின் கலாச்சாரத்தில் வேரூன்றிருக்கும் மக்களே என்றும் முதலிடம் எனும் உணர்வுக்கேற்ப இந்த 360 டிகிரி பாகை பிரச்சாரமானது ஒளிபரப்பு, டிஜிட்டல், அச்சு மற்றும் இதர விளம்பர தளங்களைக் கொண்டு மக்களை நாடும்.

இப்பிரச்சாரம், நேற்று நடைபெற்ற "ஹிடுப் பெர்சாமா" எனப்படும் தேசிய தினம் மற்றும் மலேசிய தின அஞ்சலி விழா முதல் தொடங்கப்பட்டது.

மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் நாவலாசிரியரும் கவிஞருமான எ. சாமாட் சயித் ஆகியோரால் விவரிக்கப்பட்டுள்ள இந்த காணொளி, அனைத்துக் கோணங்களிலிருந்து மலேசியர்களின் அன்றாட வாழ்க்கையையும், சிறந்த எதிர்காலத்திற்காக அவர்கள் ஒன்றிணைந்து பாடுபடுவதையிம் சித்தரிக்கிறது.

ஏர்ஏசியா மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ரியாட் அஸ்மத் கூறுகையில், " மலேசியாவின் வலிமை எப்போதுமே அதன் மக்களும் பன்முகத்தன்மையும் தான். இவ்வாண்டு, இந்த பன்முகத்தன்மையை வெளிப்படுத்தி, வேறுபாடுகள் இருந்த போதிலும் நம் நீட்டித்த வலிமைக்குக் காரணமாக விளங்குவதை நினைவுறுத்த விரும்பினோம். அவ்வகையில், ஏர்ஏசியா மலேசியாவின் நுண்ணியத்தைப் போன்றது, பல இனங்கள் மதங்கள் மற்றும் பின்னனிகளைக் கொண்ட நட்சத்திரங்களால் ஒரு கைசேர தோற்றுவிக்கப் பட்டதே இன்றைய ஏர்ஏசியாவாகிய நாங்கள். "

தேசிய தினம் மற்றும் மலேசிய தினத்தைக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏர்ஏசியா, அனைத்து தளங்களுக்குப் பயணிக்கும் விமான டிக்கெட்டுக்களுக்கு* 20% தள்ளுபடியை வழங்குகிறது. 2 செப்டம்பர் 2019 முதல் 19 நவம்பர் 2019* வரையிலான பயணங்களுக்கு, இப்போது தொடங்கி 1 செப்டம்பர் 2019 வரை airasia.com அல்லது ஏர்ஏசியா மொபைல் செயலி வாயிலாக முன்பதிவு செய்யலாம்.

கூடுதலாக 5% சேமிப்பை, AAHOTEL5 எனும் சலுகைக் குறியீட்டைப் பயன்படுத்தி தங்கும் விடுதிகளுகளை முன்பதிவு செய்வதிலும், மற்றும் 20% சேமிப்பை இருக்கையைத் தேர்வு** செய்வதிலும் பெறலாம் அதாவது நீங்கள் குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு பயணித்தால், வசதியான பிரத்தியேக இருக்கையைத் தேர்வு செய்யலாம், மற்றும் முன்னுரிமை போர்டிங் ஆகியவற்றை அனுபவிக்கலாம்.

ஏர்ஏசியா தொடர்பான அண்மைய தகவல்கள், நிகழ்வுகள் மற்றும் விளம்பரங்களை அறிய, டிவிட்டர் (twitter.com/AirAsia), Facebook (facebook.com/AirAsia) மற்றும் Instagram (instagram.com/AirAsia) ஆகியவற்றைப் பின் தொடரவும்.

* தள்ளுபடி அடிப்படை கட்டணங்களுக்கு மட்டுமே பொருந்தும். நேரடி டெபிட், க்ரெடிட், டெபிட் அல்லது சார்ஜ் அட்டைகளைப் பயன்படுத்தி செலுத்தப்படும் கட்டணங்களுக்கு செயலாக்கக் கட்டணம் விதிக்கப்படும். BigPay வழி பணம் செலுத்தி செயலாக்கக் கட்டணத் தள்ளுபடியை அனுபவியுங்கள். முழு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு airasia/b9qKC- யை நாடுங்கள்.

** இருக்கைத் தேர்வு தள்ளுபடி, டிஜே கேரியர் குறியீடு, ஜப்பானுக்கு/ ஜப்பானிலிருந்து வரும் விமானங்கள் மற்றும் MyBookings செயலி வழி மேம்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளுக்கு இது பொருந்தாது.