AirAsia Newsroom

View Original

[1 டிசம்பர் 2024 நண்பகல் 4.30க்கு பதிவேற்றம் செய்யப்பட்டது] பயண கையேடு: வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு Air Asia சேவை மீட்பு சலுகைகளை வழங்குகிறது

[1 டிசம்பர் 2024 நண்பகல் 4.30க்கு பதிவேற்றம் செய்யப்பட்டது]

இந்தியா, 29 நவ 2024 -மோசமான வானிலை மற்றும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல நகர்களில் எங்களின்பயணிகளுக்கு ஆதரவு வழங்க AirAsia கடமைப்பட்டுள்ளது. பயண தடைகளை குறைக்கவும் தளர்வைவழங்கவும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவும் வகையில் நாங்கள் சேவை மீட்பு சலுகைகளைவழங்குகிறோம்

மோசமான வானிலையின் காரணமாக விமான நிலையங்களில் தரையிறங்க மற்றும் அங்கிருந்து புறப்படுவதில்பாதிக்கப்பட்ட விமானங்கள்.

* இந்தியா ( சென்னை)*

* மலேசியா(அலோர் ஸ்டார், கோல திரெங்கானு & கோத்தா பாரு) 

* தாய்லாந்து ( நாராத்திவாட் & ஹாட்யாய்)

*ஓடுபாதை வெள்ளம் காரணமாக ஏஓஆர் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்

இந்த நகர்களில் டிக்கெட்டுகளை பதிவு செய்த பயணிகளுக்கு, தங்களின் விமான நிலவரம் குறித்துமின்னஞ்சலில் மற்றும் குறுந்தகவல்கள் வழி.

நேரடியாக தகவல்கள் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட பயணிகள் கீழ்க்கண்ட சேவை மீட்பு சலுகைகளை தேர்வுசெய்து கொள்ளலாம். 

1. விமான பயணம்: கட்டணம் எதுவுமின்றி புதிய பயண தேதியை ஒரு முறைக்கு மாற்றிக் கொள்ளலாம்(முதல்முறையாக உறுதிப்படுத்தப்பட்ட தேதியிலிருந்து 14 நாட்களுக்குள்);OR

2. கணக்கில் பதிவேற்றம்: பதிவின் மதிப்புத் தொகையை வரும் கால பயணத்திற்கு உங்களின் Air Asia கணக்கில் வைத்துக் கொள்ளலாம்

3. முழு அளவிலான மீட்பு தொகை:( விமான பயண ரத்துக்கு) தொடக்கத்தில் செலுத்தப்பட்ட தொகையைமீட்டுக் கொள்ளும் கோரிக்கை, விமான ரத்துக்கான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் பொறுத்தது

4. AOR நுழையும் மற்றும் வெளியேறும் பயணங்களுக்கு, பாதை மாற்றம்: பினாங்கு அனைத்துலக விமானநிலையத்திற்கு பயணத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பு 

( ஏற்கனவே Air Asia Superapp அல்லது website) என்றழைக்கப்பட்ட AskBo சிறப்பு பட்டனின் வழிவெள்ளத்திற்கான சேவை மீட்பு சலுகைகளை பயணிகள் எளிதில் பெறலாம் பயணிகள் தங்களின் அண்மைய விமான நிலவரங்கள் குறித்து airasia.com/flightstatus அல்லது AirAsia MOVE செயலின் வழி தெரிந்து கொள்ளலாம்.

அனைத்து பயனுகளும் தடையின்றி தங்களின் பயணத்தை தொடர இந்த வெள்ள நிலவரம் குறித்து Air Asia அணுக்கமாக கண்காணித்து வரும்.