மோசமடைந்து வரும் klia2-இன் குடிநுழைவு நெரிசலுக்கு மலேசியா ஏர்போர்ட்ஸ் தீர்வு காண வேண்டும், ஏர்ஏசியா வலியுறுத்து

​சிப்பாங், 17 அக்டோபர் 2019 - விசிட் மலேசியா 2020 (VM2020)- ஐ முன்னிட்டு 30 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை வரவேற்க மலெசியா தயாராகி வருவதால், klia2-ல் உள்ள குடிநுழைவுச் சாவடிகளில் மோசமடைந்தது வரும் நெரிசலை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டுமென, விமான நிலைய செயல்முறை நிறுவனமான மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்-ஐ (MAHB) ஏர்ஏசியா வலியுறுத்துகிறது.

ஏர்ஏசியா மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ரியாட் அஸ்மத் மற்றும் ஏர்ஏசியா X மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பென்யமின் இஸ்மாயில் ஆகியோர் கூறுகையில், " klia2-இல் குடிநுழைவுச் சாவடிகளில் நீண்ட வரிசைகளால் நெரிசல் ஏற்படுவது ஒரு தினசரி நிகழ்வாகும். ஆயினும், நாளடைவில் இந்நிலை மோசமாகி வருகிறது. இணைக்கும் விமானங்களை குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைய முடியாமலும், முக்கிய கூட்டங்களையும் சந்திப்புகளையும் சரியான சமயத்தில் கலந்துக் கொள்ள முடியாமல் தவர விடுவதாகவும் பல புகார்களை எங்கள் பயணிகளிடமிருந்து நாங்கள் அதிகம் பெறுகிறோம்.

"சுற்றுப்பயணிகள் மலேசியாவிற்கு வரும்போது சந்திக்கும் முதல் தளம் விமான நிலையமாகும். இந்த முதல் அனுபவமே திறமையற்றதாகவும் மோசமான வாடிக்கையாளர் சேவையையும் கொண்டுருப்பது அவமானத்திற்குரிய விசயமாகும், குறிப்பாக VM2020-ஐ மிக விரைவில் அனுசரிக்கும் தருவாயில் இது நாட்டிற்கு இழுக்கை ஏற்படுத்தும்."

சில சமங்களில், குறிப்பாக அதிகாலை 3.00 மணி முதல் 7.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை, மற்றும் இரவு 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை பயணிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குடிநுழைவுச் சாவடிகளில் வரிசை நிற்க வேண்டியுள்ளது.

"Klia2-இன் மோசமான வடிவமைப்பு மற்றும் குறைபாடுகள் உள்ள கட்டமைப்பினால் இச்சிக்கல் நிலவுகிறது. இவ்விவகாரம் தொடர்பில் ஒரு தீர்வைக்கான MAHB- யிடம் நாங்கள் பல முறை அனுகியுள்ளோம். இது தொடர்பாக உரிய மாற்றங்களைச் செய்வதாகவும், குடிநுழைவுச் சாவடிகளுக்கு இடையூறாக இருக்கும் வரிவிலக்கு கடைகளை அப்புறப்படுத்தி அச்சாவடிகளை விரிவுபடுத்தப் போவதாகவும் எங்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை இப்பிரச்சினையைக் களைய எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை, மாறாக நாளுக்கு நாள் நெரிசல் மோசமடைந்தது வருகிறது. சில பயணிகள் விமானம் தரையிறங்கும் வாயில் வரை வரிசைகளில் நிற்க வேண்டியுள்ளது," என ரியாட் மற்றும் பென்யமின் கூறினர்.

"குடிநுழைவுத் துறை இவ்விவகாரத்தில் உச்ச நேரங்களில் அனைத்துச் சாவடிகளையும் திறந்து வைப்பதன் வழி மிகவும் புரிந்துணர்வோடும் உதவிகரமாகவும் இருந்து வருகிறது. அதுதவிர வேறு உதவிகளை அவர்கள் செய்ய இயலாது, ஏனெனில் சாவடிகளை அதிகரிப்பது, வரிசை நிற்கும் இடத்தின் பரப்பளவை விரிவுபடுத்துவது போன்றவை MAHB-இன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

" ஒரு கட்டுப்பாட்டாளர் மற்றும் வான்போக்குவரத்து வாடிக்கையாளர் பாதுகாப்பு அமைப்பாக விளங்கும் மலேசிய வான்போக்குவரத்து ஆணையம் (Mavcom) இவ்விவகாரத்தில் தலையிட்டு விரைவாக தீர்க்கப்படுவதை உறுதிசெய்ய தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்."