மாவ்கோம்-இன் RAB கட்டமைப்பு அரசாங்கத்தின் செழுமையான பகிர்வு இலக்கிற்கு ஏற்புடையதாக இல்லை
சிப்பாங், 7 நவம்பர் 2019 - மலேசிய வான்போக்குவரத்து ஆணையம் (மாவ்கோம்) சமமான, உயர் வருமானம் கொண்ட ஒரு நாட்டை உருவமைக்கும் இலக்கான அரசாங்கத்தின் செழுமையான பகிர்வை பிரதிபலிக்கவில்லை என ஏர்ஏசியா இன்று கூறியுள்ளது.
மாவ்கோம்-இன் புதிய ஒழுங்குமுறை சொத்துத் தள (RAB) கட்டமைப்பு சில தண்டிக்கக் கூடிய கூறுகளைக் கொண்டிருப்பதால் அது செழுமையான பகிர்வு இலக்கு 2030-கு முரணாக இருப்பதோடு அவ்விலக்கின் முக்கிய அம்சமான செல்வத்தை உருவாக்குதல் மற்றும் அனைத்து மலேசியர்களின் வாங்கும் சக்தியை அதிகரித்தல் போன்றவைகளை முடக்குவதாக ஏர்ஏசியா கூறுகிறது.
ஏர்ஏசியா குழுமத் தலைவர் (ஏர்லைன்ஸ்) போ லிங்கம் கூறுகையில், " அனைத்து மலேசியர்களுக்கும் அதிக வாய்ப்புகளை வழங்குவதையும், அவர்களின் விமான பயண செலவைக் குறைப்பதையும் விடுத்து, மாவ்கோம்மே முன்னின்று வழிநடத்தும் RAB, உண்மையில் பலரால் அனுக முடியாத, எட்டா தூரத்திற்கு சென்றுகொண்டிருக்கும் இவ்வாணையம் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக செயல்படுகிறது.
"KLIA மற்றும் klia2 ஆகியவை ஒரே கோலாலம்பூர் அனைத்துலக விமான முனையமாக இருப்பதால், அவ்விரு முனையத்திற்கும் இடையில் பயணிகள் சேவைக் கட்டணம் (PSC) சமப்படுத்தப்பட வேண்டுமென மாவ்கோம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அவ்விரு முனையங்களிலும் காணப்படும் தோற்றம் மற்றும் சேவை நிலைகளிலும் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன என்பதை மறைத்து, ஒப்புக்கொள்ள மறுக்கின்றன இந்த மாவ்கோம் மற்றும் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) என்பதுதான் உண்மையான நிலவரம்.
"RAB கட்டமைப்பு சரியான நோக்கத்தோடும் நல்லெண்ணத்தோடும் இருக்க வேண்டும். ஆயினும், துரதிர்ஷ்டவசமாக, இலாபகரமான மற்றும் இலாப நோக்கமற்ற விமான நிலையங்களுக்கிடையில் குறுக்கு மானியம் இந்த புதிய RAB முன்மொழிவின் கீழ் தொடரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். MAHB 2020 முதல் 2022 வரை RM5.2 பில்லியனைச் செலவிட திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது, இதில் கணிசமான பகுதி KLIA-வில் பொருட்களை கையாளும் முறை மற்றும் ஏரோட்ரெயின்களுக்காக ஒதுக்கப்படும். ஆக, KLIA-இல் இருக்கும் இந்த விலையுயர்ந்த வசதிகளை அனுபவிக்க இயலாத குறைந்த விலைக் கட்டண பயணிகள் விருந்தோம்பல் குறைந்த klia2 பயன்படுத்துவதற்கும் அதே PSC-யைச் செலுத்துவது நியாயமா?
"மேலும், KLIA மற்றும் klia2 விமான நிலைய மேம்பாட்டில், குறிப்பாக அவ்விரு முனையத்திற்குமிடையேயான திட்டமிடல் உட்பட எவ்வித வளர்ச்சியிலும் ஈடுபடவில்லை என்பதால், குறுகிய காலத்தில் இப்பெரிய தொகையை எப்படி திறன்பட முடிப்பார்கள் MAHB என்பதை நாங்கள் சந்தேகிக்கின்றோம். முதலாவதாக, ஒவ்வொரு மூலதன செலவையும் நியாயப்படுத்த ஒரு விரிவான வணிக வழக்கு இல்லாதது. இரண்டாவதாக, MAHB-இன் வரலாற்று மூலதன செலவினம் ஆண்டுக்கு வெறும் RM200 முதல் RM300 மில்லியன் ஆகும், எனவே இப்பெரிய அளவிலான முதலீட்டை அவர்களால் மேற்கொள்ள முடியும் என்று பரிந்துரைக்கவில்லை.
"விமானப் பயணிகள் செலுத்தும் கட்டணற்திற்கு ஏற்ப சேவைகள் பெறுவதையும் அவர்களின் நலன் பாதுகாக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டிய கடமை மாவ்கோமைச் சார்ந்தது. ஆனால், RAB-யை சேர்த்தே ஆக வேண்டும் என்ற மாவ்கோம்மின் வற்புறுத்தலிலிருந்து அவர்கள் நாட்டின் மனநிலையை அறியவில்லை என்பது தெளிவாகிறது. குறைந்த கட்டண விமான நிறுவனங்கள் மலேசிய பங்குச் சந்தையில் 60%-ஐக் கொண்டுள்ளன. இருப்பினும், மாவ்கோம் குறைந்த கட்டண பயணத்திற்கான கோரிக்கையை ஏற்க மறுத்து, பயணிகளுக்கு நியாயமற்ற கட்டணங்களை வலியுறுத்துகிறது.
ஏர்ஏசியா எப்போதுமே சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றின் வலுவான பரிந்துரையாளராக இருந்து வருவதாக போ சுட்டிக்காடினார். இவை, ஏர்ஏசியா தனது ஒருங்கிணைந்த வணிகத்திற்கு ஊன்றுகோளாக அமைந்தது.
"நாங்கள் B40 பிரிவிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான ஊழியர்களை வேலைக்கு அமர்த்துகிறோம். அவர்களின் ஆர்வத்தைத் தொடர பல வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறோம். ஆல்ஸ்டார்ஸ்களின் கனவுகளை நனவாக்கிய பல வெற்றிக் கதைகள் எங்களிடம் உள்ளன, குறிப்பாக, குகன் தங்கேஸ்வரன் என்பவர் டிஸ்பாட்ச்-ஆக இருந்து இன்று ஒரு விமானியாகி இருக்கிறார்,' என்று அவர் கூறினார்.
" இது எங்கள் பயணிகளுக்கும் பொருந்தும். எங்களது குறைந்தக் கட்டண சேவைகள் மில்லியன் கணக்கானவர்களை முதன்முறையாக வான்வழி பறக்க வாய்ப்பளித்துள்ளது. இப்போது, அனைத்து தரப்பிலிருந்தும் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு மலேசியர்கள் விமான பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இதில், விழாக்காலங்களில் வழங்கப்படும் கழிவுகளின் மூலம் பயனடைந்த B40 இல்லங்களைச் சார்ந்த 2 மில்லியன் மக்களையும் உட்படுத்தும். நாங்கள் PSC-யாகட்டும் மாவ்கோம்மின் ஒழுங்குமுறைக் கட்டணமாகட்டும் நியாயமான மற்றும் ஏற்புடைய கட்டணங்களுக்காகத் தொடர்ந்து வாதிடுகிறோம். ஏனென்றால், இந்த கட்டணங்கள் தேவையற்றதாகவும் நியாயமற்ற முறையில் பயண செலவையும் அதிகரித்துள்ளதோடு பொதுமக்கள் வான்வழி பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பை முறியடிக்கின்றன.
"ஆகவே, செழுமையான பகிர்வு இலக்கை ஆதரிப்பதில் மாவ்கோம் எங்களது உற்சாகத்தைப் பகிர்ந்து கொள்வதாகத் தெரியவில்லை என்பது உண்மையிலேயே ஏமாற்றத்தை அளிக்கிறது. மேல, ஒரு சிறந்த மலேசியாவை உருவாக்க ஏர்ஏசியா போன்ற விமான நிறுவங்களோடும் வணிக பங்காளிகளோடும் மாவ்கோம் மிகவும் நெருக்கமாக பணியாற்ற வேண்டுமென நாங்கள் அழைக்கிறோம்."