கோலாலம்பூரை ஒரு முக்கிய மலிவுக் கட்டணத் தளமாக உருவாக்குவதில் ஏர் ஏசியாவின் பங்களிப்பை OAG அங்கீகரிக்கிறது

சிப்பாங், 25 செப்டம்பர் 2019 - கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KUL) சர்வதேச அளவில் உலகின் மிக அதிகமான இணைப்பைக் கொண்டுள்ள மலிவுக் கட்டண முனையமாக அறிவித்துள்ள 2019 OAG மெகாஹப்ஸ் குறியீட்டை ஏர் ஏசியா வரவேற்கிறது.

மணிலா (MNL), சிங்கப்பூர் (SIN), இஞ்சியோன் (ICN) மற்றும் சான் டியேகோ (SAN) ஆகியவற்றைக் காட்டிலும் கோலாலம்பூர் முன்னிலை வகிப்பதோடு மலிவுக் கட்டணப் பிரிவில் காணப்படும் எஞ்சிய முதல் 25 முனையங்களைக் காட்டிலும் கோலாலம்பூரின் இணைப்பு கணிசமான அளவில் அதிகமே என்று OAG மெகாஹப்ஸ் கூறுகிறது.

சர்வதேச விமானங்களுக்கான இருவழி திட்டமிடப்பட்ட இணைப்புகளின் எண்ணிக்கையையும் விமான நிலையங்களிலிருந்து செயல்படும் தளங்களையும் ஒப்பிட்டு இந்த உலகின் சர்வதேச ரீதியில் அதிகம் இணைப்பைக் கொண்டுள்ள முனையத்தை OAG மெகாஹப்ஸ் கண்டறிகிறது.

ஏர் ஏசியா குழுமத்தின் தலைவர் (ஏர்லைன்ஸ்) போ லிங்கம் கூறுகையில், " OAG மெகாஹப்ஸ் குறியீடு, klia2- லிருந்து இயங்கும் ஒரே மிகப்பெரிய நிறுவனமான ஏர் ஏசியாவின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பாக விளங்கும் மக்களை உலகத்தோடு இணைப்பதையும், தொடர் முயற்சியான மலேசியாவை ஓர் உலகளாவிய விமான போக்குவரத்து மற்றும் விண்வெளி மையமாக வளர்ச்சி பெற செய்வதையும் கோடி காட்டுகிறது.

அவர் மேலும் கூறியதாவது, " மலேசியாவின் விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை போன்றவற்றுக்கு ஒருங்கிணைப்புக் கருவியாகத் திகழ்வது இந்த மலிவுக் கட்டண விமான நிறுவனங்களும் இணைப்பும் ஆகும். எனவே, நாடு ஒரு விருப்பமான சுற்றுலாத்தளமாக விளங்கும் இலக்கை அடைய விமான நிலையங்கள், கட்டுப்பாட்டாளர் மற்றும் அரசாங்கம் ஆகியோரிடையே ஒரு பொதுவான புரிதல் இருத்தல் அவசியம்."

குழும ரீதியாக ஏர் ஏசியா தினமுன் 57,000 பயணிகளை 320-க்கும் அதிகமான விமானங்களின் வழி 151 சர்வதேச தளங்களுக்கு klia2-லிருந்து பறக்கிறது. இது, அம்மலிவுக் கட்டண முனையத்தில் காணப்படும் பயணிகள் போக்குவரத்தில் 97% ஆகும்.

முழு அறிக்கைக்கு, இங்கே அனுகவும்.

M A