இது அற்புத இந்தியா'பிரச்சாரத்தின் வழி இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட நகர்களுக்கு மலிவு கட்டணங்களை ஏர் ஆசியா வழங்குகிறது

சிப்பாங் ஜன 2 - ஏர் ஆசியா இன்று 'இது தான் இந்தியா'பிரச்சாரத்தை தொடங்கியது, இதன் வழி கோலாலம்பூரிலிருந்து இந்தியாவில் ஏர் ஆசியாவின் மாபெரும் தொடர்பின் வழி 12 அற்புதமான நகரங்களுக்கு வியக்க தக்க வகையில் மலிவு கட்டணங்களை ஏர் ஆசியா வழங்குகிறது.அனைத்தும் அடங்கிய வெ 329 ஒரு வழி பயண கட்டணத்திலிருந்து அற்புத இந்தியாவின் சென்னை, திருச்சிராப்பள்ளி, கொச்சின், ஹைதராபாத், பெங்களூரு, கல்கத்தா, புது டில்லி, அமிர்தரஸ், திருவானந்தபுரம்(2024 ஏப்ரல் 21 முதல்), ஜெய்ப்பூர்(2024 ஏப்ரல் 21 முதல்), விசாகப்பட்டினம் (2024 ஏப்ரல் 26 முதல்) மற்றும் அமெடபாத்(2024 மே 1 முதல்) தொடங்குகிறது. இதன் வழி இந்தியாவிலிருந்து கோலாலம்பூருக்கு பயணிக்கும் சுற்றுப்பயணிகள் ஒரு வழி கட்டணமாக ரூபாய் 7,835 செலுத்தி டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம்.பிப்ரவரி 2 மற்றும் 30 நவம்பர் 2024 இடையே பயணம் செய்ய இப்பொழுது முதல் 2024 பிப்ரவரி 4க்குள் டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம்

இந்தியா ஏர் ஆசியாவின் மாபெரும் விற்பனை சந்தையாகும். இதன் காரணமாக வங்காள விரிகுடாவில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு மீண்டும் தனது சேவையை தொடங்க ஏர் ஆசியா அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் மலேசியாவிற்கு இடையே தனது தொடர்பை வலுப்படுத்த ஏர் ஆசியாவின் இது ஒரு முன்னெடுப்பு.

இதனடையே இந்தியா மற்றும் மலேசியாவிற்கு இடையே மலிவு கட்டணத்தில் பயணிக்க ஏர் ஆசியாவின் ஒரு முன்னெடுப்பு இது என ஏர் ஆசியா எவியேஷன் குழும நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஃபோ லிங்கம் கூறினார்.

மலிவு கட்டணத்தின் வழி பயணிகளுக்கு தரமான சேவைகளை வழங்குவதில் ஏர் ஆசியா தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு முதல் விமான சேவையை தொடங்கியது முதல், இப்பொழுது இந்தியாவில் 12 நகர்களுக்கு ஏர் ஆசியா சிறகடிப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியாவில் இன்னும் அற்புதமான நகரங்களுக்கு சிறகடிக்க ஏர் ஆசியா திட்டம் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பயணிகளை தடையின்றி கொண்டு செல்வதில் ஏர் ஆசியா உறுதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் 'இது தான் இந்தியா' பிரச்சாரத்தை தொடங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என ஃபோ லிங்கம் குறிப்பிட்டார்.ஊக்குவிப்பின் வழி தங்களின் விமான பயண டிக்கெட்டுகளை பதிவு செய்யும் பயணிகள் 20 கேஜி இலவச பயணப்பெட்டி கட்டணத்தை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார். துணிமணிகள், அலங்காரப் பொருட்கள், நினைவுச் சின்னங்கள் போன்றவற்றை வாங்க விரும்புபவர்களுக்கு இது மிக பொருத்தமாக இருக்கும் என அவர் சுட்டிக் காட்டினார்.

@flyairasia Instagram பதிவின் மூலம் ஏர் ஆசியாவின் சேவைகளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு வழி பயண கட்டணத்தில் வரி, MAVCOM கட்டணம், எரிபொருள் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களும் அடங்கும். மற்றும் இதர அனைத்தும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.