து அற்புத இந்தியா' பிரச்சாரத்தை தொடங்கியது ஏர் ஆசியா
சிப்பாங் ஜன 2 சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிற்கு இடையே பயண வாய்ப்புகளை அதிகரிக்க 'இது தான் இந்தியா' பிரச்சாரத்தை ஏர் ஆசியா தொடங்கியது. இதன் வழி தனது தடையற்ற நேரடி-பயண சேவையின் மூலம் சிறந்த மற்றும் மலிவு கட்டணங்களில் பயணிகள் செல்லலாம்.
கோலாலம்பூரில் ஒரு குறுகிய நேரம் நின்று விட்டு, சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகள் இந்தியாவில் 11 நகரங்களுக்கு பயணம் செல்ல முடியும்.
சென்னை, திருச்சிராப்பள்ளி, கொச்சின், ஹைதராபாத், பெங்களூரு, கல்கத்தா, புது டில்லி, அமிர்தரஸ், திருவானந்தபுரம்(2024 பிப்ரவரி 21ல் தொடங்குகிறது, ஜெய்ப்பூர்(2024 ஏப்ரல் 21ல் தொடங்குகிறது, விசாகப்பட்டினம் (2024 ஏப்ரல் 26ல் தொடங்குகிறது மற்றும் அமெடபாத்(2024 மே 1ல் தொடங்குகிறது). அதேவேளையில் மாற்று வழியாக சிங்கப்பூரிலிருந்து பேங்காக் வழி(டொன் முவெங்) பெங்களூரு, கல்கத்தா, கொச்சின், ஜெய்ப்பூர், சென்னை, லக்னோ, அமெடபாத்,காயா,குவாத்தி நகர்களுக்கு பயணிக்கலாம்.
இதனிடையே 'குறைந்த கட்டணங்களில் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிற்கு இடையே மலிவாக பயணம் செய்ய முடியும் என்பதை அறிவிப்பதில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாக' ஏர் ஆசியா சிங்கப்பூர் தலைமை செயல்முறை அதிகாரி லோகன் வேலாயுதம் கூறினார்.
சிங்கப்பூரிலிருந்து மற்றும் சிங்கப்பூருக்கும் மக்களை இணைக்க இந்தியா ஒரு மிகப்பெரிய விற்பனை சந்தை என்றார் அவர்.
கடந்த ஏழு ஆண்டுகளில் இவ்விரு நாடுகளுக்கு இடையே 180,000 பயணிகளை நாங்கள் கொண்டு சென்றுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
மக்களின் விமான நிறுவனம் என்ற நிலையில், மலிவான விலையில் தடையின்றி மக்களை இணைக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.
ஆகையால் எங்களில் பயணிகளுக்கு 'இது தான் இந்தியா'என்ற பிரச்சாரத்தை தொடங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.
'எங்களின் நேரடி பயண சேவையின்' வழி பயணிகள் குடிநுழைவு நடைமுறையை கடக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் வெவ்வேறு விமானங்களிலிருந்து வந்தடையும் பயணிகள் தாங்கள் இறுதியாக சென்றடையும் நகர்களில் பயணப் பெட்டிகளை பெற்றுக் கொள்ளலாம். இதன் வழி சிங்கப்பூரிலிருந்து மற்றும் சிங்கப்பூருக்கும் இந்தியாவில் 11 அற்புதமான நபர்களுக்கு கூடுதல் பயணிகளை தங்களால் கொண்டு செல்ல முடியும் என லோகன் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் சிங்கப்பூருக்கு இடையே சுற்றுப்பயணத்தை உற்சாகப்படுத்த அனைத்தும் அடங்கிய ஒரு வழி பயண கட்டணமாக SGD243 தொடங்கி ஒரு ஊக்குவிப்பு கட்டணத்தை ஏர் ஆசியா அறிமுகப்படுத்தியுள்ளது.
கோலாலம்பூர் மையத்தில் ஒரு குறுகிய நேரம் நின்று இந்தியாவில் அற்புதத்தை பயணிகள் கண்டு களிக்கலாம் என அவர் தெரிவித்தார். அதேபோல் இந்தியாவைச் சேர்ந்த பயணிகள் 'சிங்க நகரை' சுற்றிப் பார்க்க ஒரு வழி கட்டணம் ரூபாய் 7,835 செலுத்தி டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம்.பிப்ரவரி 2 மற்றும் 2024 நவம்பர் 30 வரை பயணம் செய்ய இப்பொழுது முதல் 2024 பிப்ரவரி 4க்குள் டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம்.
ஒரு வழி ஊக்குவிப்பு கட்டணம் வரிகள், எரிபொருள் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களையும் அடங்கும். இதர நிபந்தனைகளும் அடங்கும்