ஏர்ஏசியா குழுமத்தின் விமானசேவை தற்காலிக நிறுத்தம்

சிப்பாங், 26 மார்ச் 2020 - கொவிட்-19 கொள்ளை நோயினால் பல்வேறு நாடுகள் விதித்துள்ள விரிவான மற்றும் அதிகரிக்குன் எல்லைக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, ஏர்ஏசியா குழுமம் தற்காலிக விமானசேவை நிறுத்தத்தை அதன் பெரும்பாலான பயணவழிகளுக்கு அறிவிக்க விரும்புகிறது. 

இவ்வறிவிப்பு, ஏர்ஏசியா குழுமம் மற்றும் ஏர்ஏசியா X-இன் கீழ் இயங்கும் விமான நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் சார்பாகவும் செய்யப்படுகிறது. அவை:

Updated as of 13 April 2020 at 2100hrs (GMT+8).

Updated as of 13 April 2020 at 2100hrs (GMT+8).

ஏர்ஏசியா எப்போதும் அதன் பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை முதன்மையாகக் கொண்டுள்ளது.  அரசாங்கத்தின் தனிமைப்படுத்தம் உட்பட இயல்பு நிலை கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏர்ஏசியாவும் இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்கவும், அனைவரும் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளவதை உறுதி செய்வதிலும் தனது பங்கை ஆற்றுகிறது. 

நாங்கள் தொடர்ந்து இந்நிலையை அனுக்கமாக கண்காணிப்போம், தேவையான ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு நிலைமை மேம்பட்டவுடன் எங்கள் சேவைகளை மீண்டும் நிலைநாட்ட நாங்கள் தயாராக உள்ளோம்.

பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளும் உடனடியாக மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்படுவார்கள். அவர்கள் முன்பதிவு செய்த பயணச் சீட்டை கடன் கணக்குகள் (Credit Accounts) மூலம் 365 நாட்களுக்குச் செல்லுபடியாகும், புதிய பயணச் சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் அல்லது கட்டணமின்றி வசதிக்கு ஏற்றவாறு வேறொரு திகதிக்கு வரையறையின்றி பயணத்தை 31 அக்டோபர் 2020-குள் மாற்றிக் கொள்ளலாம். airasia.com அல்லது support.airasia.com வழி ஏர்ஏசியா மெய்நிகர் ஆல்ஸ்டார் ஏவா வழியாக பயணிகள் தங்களது முன்பதிவுகளில் மாற்றங்களைச் செய்யலாம். 

பயணிகள் airasia.com மற்றும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஏர்ஏசியா வழங்கும் பயண ஆலோசனைகளை பின்பற்றிம்படி வலியிறுத்தப்படுகின்றனர். 

இந்த தற்காலிக சேவை நிறுத்தம் எங்களது பயணிகள் மற்றும் ஊழியர்களின் நல்வாழ்வை உறுதிபடுத்தும் ஒரு சரியான செயல் என நாங்கள் நம்புகிறோம். அதோடு, இந்த சவாலான தருணத்தில் இது எங்கள் வணிகத்தின் முதன்மை அம்சமாக அமையும் எனவும் கூறிக்கொள்கிறோம். 

செலவுகளை மேலும் நிர்வகிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் எங்கள் முயற்சியில், ஏர்ஏசியா குழுமத்தின் நிர்வாகம் மற்றும் மூத்த ஊழியர்கள் தன்னார்வ முறையில் 100% முதல் 15% வரை சம்பள குறைப்பிற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். இது, குறைவான பயண செவையைக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தை நாங்கள் கடக்கவும், அதே சமயத்தில் எங்கள் ஊழியர்களுக்குக் குறிப்பாக ஜூனியர் பதவிகளை வகிப்பவர்கள் மீதான தாக்கத்தைக் குறைப்பதற்கும், எங்கள் விமானசேவைகள் மீண்டும் இயங்கும்போது சிறப்பான சேவையை வழங்கவும் பெரிதும் உதவும். 

இதற்கிடையில், ஏர்ஏசியா குழுமம் தொடர்ந்து பல நாடுகளில் சிக்கித் தவிக்கும் பயணிகளை திருப்பி அனுப்புவதிலும், பொருட்களை அனுப்புவதிலும் சம்பந்தப்பட்ட அரசுடன் இணைந்து செயல்படும். 

ஏர்ஏசியாவுன் இணையச் சந்தையான OURSHOP மற்றும் சரக்கு (cargo) மற்றும் தளவாட தளமான டெலிபோர்ட் (teleport) ஆகியவை செயல்பாட்டில் இருக்கும். இவை, தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு மருத்துவமனைகள் மற்றும் முதன்மை அவசரகால பணியாளர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி, பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றைக் கொண்டுச் செல்ல டெலிபோர்ட் பயணிகள் விமானங்களைப் பயன்படுத்தும்.

** தயவுசெய்து மேலே காணும் அறிக்கையை ஏர்ஏசியா க்ருப் பெர்ஹாட்-ஐ குறித்து எழுதுக.

Malaysia, News, தமிழ்M A